Up next


இயேசுவின் வாழ்க்கை | Tamil | Official Full HD Movie

1 Views
Play2Box
12
Published on 09/January/23 / In Film & Animation / tamil

‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற இந்த திரைப்படம் இயேசுவுடன் மிகவும் நெருக்கமாய் இருந்த நண்பர்களால் சொல்லப்பட்ட அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளாகும். வேதாகமத்திலுள்ள யோவான் எழுதிய நற்செய்தியை தழுவிய நிகழ்வுகளை கொண்டது. அவர் வாழ்க்கையை பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம் இயேசு எவ்வாறு இந்த உலகத்தின் வரலாற்றை மாற்றினார் என்பதை இப்போது கண்டறிந்துகொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். அவருடைய வாழ்க்கையும் இறப்பும் இந்த உலகையே மாற்றியமைத்தது. இன்றும் அவருடைய இன்றியமையாத வார்த்தையினாலும் அற்புத அடையாளங்களினாலும் பலருடைய வாழ்க்கையில் எல்லையில்லா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய வல்லமைமிக்க வார்த்தை, இன்றும் உலகம் முழுவதிலும் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மறுரூபமாக்கி வருகிறது.

இது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

பார்க்கவும்: உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கும்போது, மற்றவர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களையும் நடத்துங்கள். ♥


யோவான் நற்செய்தியின் அத்தியாயங்கள்:

0:00:00 யோவான் எழுதிய நற்செய்தியின் அறிமுகம்
0:00:51 யோவான் 1: யோவான் ஸ்னாநகர் & இயேசுவின் முதல் சீடர்கள்
0:12:50 யோவான் 2: ஒரு அதிசயம் நிறைந்த திருமணம் & தேவாலயத்தில் கோபம் கொண்ட இயேசு
0:20:00 யோவான் 3: நிக்கொதேமு மற்றும் யோவான் இயேசுவை சந்தித்தல்
0:25:17 யோவான் 4: குணமளித்தலின் கதைகள் | சமாரிய பெண் | இயேசு ஒரு அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார்
0:34:14 யோவான் 5: குளத்தின் அருகே ஒரு குணம்பெறுதல்
0:42:46 யோவான் 6: தண்ணீர் மீது நடத்தல்
0:57:39 யோவான் 7: இவர்தான் மேசியாவா?
1:05:11 யோவான் 8: விபச்சாரம்: நீங்கள் பிடிபட்டால் என்ன நடக்கும்
1:16:20 யோவான் 9: பார்வையற்ற ஒருவனை இயேசு குணப்படுத்துகிறார்
1:24:20 யோவான் 10: நல்ல மேய்ப்பன்
1:30:36 யோவான் 11: லாசருவின் கதை
1:40:51 யோவான் 12: இயேசு தனது மரணத்தைப் குறித்து பேசுகிறார்
1:51:13 யோவான் 13: இயேசு தம் சீடர்களின் கால்களை கழுவுகிறார்
2:00:10 யோவான் 14-16: கடைசி உரை: இயேசு தம் நண்பர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
2:14:34 யோவான் 17: இயேசுவின் ஜெபம்
2:18:52 யோவான் 18: இயேசு கைது செய்யப்படுகிறார்
2:27:59 யோவான் 19: இயேசுவின் மரணம்
2:40:50 யோவான் 20: இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுகிறார்
2:47:37 யோவான் 21: கலிலேயா கடலில் ஒரு வியக்கத்தக்க மீன்பிடி!

இதுவே "இயேசுவின் வாழ்க்கை" என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல்.

வாழ்க்கையின் அர்த்தம் என்ன அல்லது கடவுள் யார் என்பதுபோன்ற கேள்விகள் உங்களிடம் உள்ளதா?
உங்கள் கேள்விகள் மற்றும் எண்ணங்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம்! எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்:
https://tamil.jesus.net/

முன்னதாக, "யோவானின் நற்செய்தி" என்ற பெயர்பெற்றிருந்த இந்த "இயேசுவின் வாழ்க்கை" திரைப்படம், 2003 ஆம் ஆண்டு டொராண்டோ திரைப்பட விழாவில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சியில் திரையிடப்பட்டது. இந்த மூன்று மணி நேர நாடகம் வேதாகமத்திலுள்ள யோவானின் நற்செய்தியை துல்லியமாக பின்பற்றுகிறது. இது கனடிய நிறுவனமான விஷுவல் பைபிள் இன்டர்நேஷனலின் ஒரு தயாரிப்பாகும். இந்தப் திரைப்படத்தை பிரபல பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் பிலிப் சவில் இயக்கியுள்ளார். பிரபல நடிகர் ஹென்றி இயன் குசிக் இயேசுவின் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக் (தம்ஸ் அப்) போடுங்க ♥

Show more
1 Comments sort Sort By

Murshida
Murshida 2 years ago

Nc

   0    0
Show more

Up next